மேலும் செய்திகள்
ரத்ததான விழிப்புணர்வு மதுரைக்காரர்களுக்கு விருது
14-Oct-2025
விக்கிரவாண்டி: விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவ மனையில் தேசிய தன் னார்வ ரத்த தான தினம் நிகழ்ச்சி நடந்தது. துணை முதல்வர் தாரணி தலைமை தாங்கினார். துணை இயக்குனர் செந்தில் குமார், ஆர்.எம்.ஓ., ரவிக்குமார், ரத்த வங்கி தலைவர் விஜயா, ஆகியோர் முன்னிலை வகித்தனர். மருத்துவ சமூக பணியாளர் அசோக்குமார் வரவேற்றார். மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் லதா கலந்து கொண்டு தன்னார்வ ரத்ததான கொடையாளர்களுக்கு சான்றுகள் வழங்கி பாராட்டி பேசினார். ரத்த வங்கி மைய இணை பேராசிரியர்கள் சுப்பு லட்சுமி, நித்யா, திண்டிவனம் அரசு மருத்துவ மனை ரத்த வங்கி தலைவர் பாரதி, எய்ட்ஸ் தடுப்பு திட்ட மாவட்ட திட்ட மேலாளர் நல்லத்தம்பி, பிரேமா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
14-Oct-2025