உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஆடு மேய்க்க கொத்தடிமையாக வைத்திருந்த சிறுவன் மீட்பு

ஆடு மேய்க்க கொத்தடிமையாக வைத்திருந்த சிறுவன் மீட்பு

விழுப்புரம்; ஆடு மேய்க்க கொத்தடிமையாக இருந்த சிறுவனை, அதிகாரிகள் குழுவினர் மீட்டனர். விழுப்புரம் அருகே உள்ள கோனுார் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன், 50; வீட்டில் கொட்டகை அமைத்து ஆடுகளை வளர்த்து வருகிறார். இவர், கடலுார் மாவட்டத்தை சேர்ந்த, 13 வயது சிறுவனை, கடந்த 4 ஆண்டுகளாக, அவரது வீட்டில் கொத்தடிமையாக வைத்திருந்து, ஆடு மேய்க்கும் பணியில் ஈடுபடுத்தி வருவதாக புகார் எழுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த விழுப்புரம் ஆர்.டி.ஓ., முருகேசன் தலைமையிலான வருவாய் அதிகாரிகள், நேற்று காலை கோனுார் கிராமத்திற்கு சென்று, சிறுவனை மீட்டனர். விசாரணைக்கு பின் சிறுவனை, அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து சிறுவனை கொத்தடிமையாக வைத்திருந்த வெங்கடேசன் மீது நடவடிக்கை எடுக்க போலீசில் புகாரளித்தனர். காணை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி