உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பிரம்மாகுமாரிகள் ராஜயோக தியான முகாம்

பிரம்மாகுமாரிகள் ராஜயோக தியான முகாம்

விழுப்புரம்: வளவனுார் வடக்கு அக்ரஹாரத்தில் உள்ள பிரம்மாகுமாரிகள் ராஜயோக தியான நிலையத்தில் நேற்று காலை 10:00 மணியிலிருந்து மதியம் 1:00 மணி வரை இலவச சிறப்பு தியான முகாம் நடந்தது. முகாமில், வாழும் கலை, மன அழுத்தத்தில் இருந்து விடுதலை, நேர்மறையான எண்ணங்கள், தற்கொலையில் இருந்து விடுபடுதல், ஆத்மா பரமாத்மா பற்றிய தேவ ரகசியங்கள், ஞான விளக்கம் மற்றும் பட விளக்கம் கற்று தரப்பட்டது. தொடர்ந்து ராஜயோக தியான பயிற்சியும் கற்றுத்தரப்பட்டது. இதில், தி.மு.க., நகர செயலாளர் ஜீவா, டாக்டர் சுந்தரமூர்த்தி ஆகியோர் பங்கேற்று, தியான அனுபவம் பற்றி கூறினர். இந்த பயிற்சி மூலம் கருமவினைகள் முற்றிலுமாக விலகி, ஆயுட்காலம் அதிகரிப்பதாகவும், இங்கு தினமும் காலை 8:00 மணி முதல் 9:00 வரையிலும், இரவு 7:00 மணி முதல் 8:30 மணி வரை இலவசமாக எவ்வித கட்டணமின்றி தியான பயிற்சி கற்றுத்தரப்படுவதாகவும், நிர்வாகி செல்வமுத்துகுமரன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை