உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விழுப்புரம் பெருமாள் கோவிலில் பிரமோற்சவ கொடியேற்றம்

விழுப்புரம் பெருமாள் கோவிலில் பிரமோற்சவ கொடியேற்றம்

விழுப்புரம் : விழுப்புரம் வைகுண்டவாச பெருமாள் கோவிலில் இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.அதனையொட்டி நேற்று காலை 7:30 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனையும் தொடர்ந்து கொடி மரத்திற்கு பூஜை செய்து கொடியேற்றம் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.தொடர்ந்து, தினமும் காலை, மாலை சிறப்பு வழிபாடுகளும், இரவு வாகனங்களில் உற்சவர் வீதியுலா நடக்கிறது. 9ம் தேதி, சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவமும், 11ம் தேதி காலை 6:15 மணிக்கு தேரோட்டமும் நடக்கிறது.ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை