உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  துாய்மை பணியாளர்களுக்கு காலை உணவுதிட்டம்  திண்டிவனத்தில் ஆய்வு

 துாய்மை பணியாளர்களுக்கு காலை உணவுதிட்டம்  திண்டிவனத்தில் ஆய்வு

திண்டிவனம்: திண்டிவனம் நகராட்சியில் துாய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் காலை உணவுத் திட்டம் குறித்து நல வாரிய உறுப்பினர் ஆய்வு மேற்கொண்டார். திண்டிவனம் நகராட்சி துாய்மைப் பணியாளர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டம் மூலம் வழங்கப்படும் உணவு சுகாதாரமான முறையில் தரமான சத்தான உணவு வழங்கபடுகிறதா என்பது குறித்து தமிழ்நாடு அரசு துாய்மைப் பணியாளர்கள் நல வாரிய மாநில உறுப்பினர் கண்ணன் நேற்று திடீர் ஆய்வு செய்தார். அப்போது பணியாளர்களிடம் காலை உணவின் தரம் குறித்து கேட்டறிந்தார். மேலும் உணவு தயாரிக்கப்படும் இடத்தை பார்வையிட்டு அவர்களுக்கு சுகாதார முறைகள் குறித்து அறிவுறுத்தினார். திண்டிவனம் நகராட்சி கமிஷனர் பானுமதி, சுகாதார அலுவலர் செந்தில்குமார், சுகாதார ஆய்வாளர் கணேசன் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !