உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கோவில் உண்டியல் உடைத்து திருட்டு

கோவில் உண்டியல் உடைத்து திருட்டு

வானுார் : வானுார் அருகே பாபா கோவில் உண்டியலை காணிக்கை மற்றும் பித்தளை குத்துவிளக்குகள் திருடு போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.வானுார் அடுத்த பூத்துறை அண்ணா நகரில் சாய்பாபா கோவில் உள்ளது. கோவில் நிர்வாகி சாம்ராஜ், நேற்று முன்தினம் கோவிலுக்குச் சென்று பார்த்த போது, முன்பக்க கேட் உடைக்கப்பட்டு, உண்டியல் உடைத்து காணிக்கை மற்றும் கோவிலுக்குள் இருந்த 2 பித்தளை குத்துவிளக்கு மற்றும் ஸ்பீக்கர்கள் திருடு போனது தெரியவந்தது.புகாரின் பேரில், ஆரோவில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ