வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு
விழுப்புரம்: வீடு புகுந்து நகை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். விழுப்புரம், சேர்மன் ஜனகராஜ் கார்டன் பகுதியை சேர்ந்தவர் சம்பத் மகன் மோகன், 38; இவர் கடந்த, 22ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு, குடும்பத்துடன் திருச்செந்துார் கோவிலுக்கு சென்றார். அங்கிருந்து புறப்பட்டு கடந்த, 25ம் தேதி வீடு திரும்பினார். அவர் வீட்டை திறந்து பார்த்த போது, மர்ம நபர்கள் வீட்டின் பின் பக்க மர கதவை உடைத்து, உள்ளே பீரோவில் இருந்த 2 சவரன் நகையை திருடி சென்றது தெரிந்தது. விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.