மேலும் செய்திகள்
விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு
18-Oct-2025
திண்டிவனம்: திண்டிவனம் ஜெயபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில், மார்பக புற்றுநோய்க்கான விழிப்புணர்வு முகாம் நடந்தது. திண்டிவனம் ேஹாஸ்ட் லயன்ஸ் சங்கம் சார்பில் நடந்த முகாமிற்கு, சங்கத் தலைவர் சுகுமார் தலைமை தாங்கினார். செயலாளர்கள் புஷ்பராஜ், பாலமுருகன் வரவேற்றனர். சங்க மாவட்ட தலைவர்கள் பாபு, ராமமூர்த்தி, சஞ்சீவி ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர். மார்பக புற்றுநோய் குறித்து, டாக்டர் நஸ்ரின் விழிப்புணர்வு கருத்துக்களை கூறினார். முகாமில், செந்தில்குமார், பாலாஜி, ஒருங்கிணைப்பாளர் நந்தினி உட்பட பலர் பங்கேற்றனர். முகாமில் பங்கேற்றவர்களுக்கு சத்துமாவு, பழங்கள் வழங்கப்பட்டது.
18-Oct-2025