உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / உடைந்த தரைப்பாலம் : எஸ்.பி., ஆய்வு

உடைந்த தரைப்பாலம் : எஸ்.பி., ஆய்வு

திண்டிவனம்: உடைந்த தரைப்பாலத்தை கண்காணிக்க போலீசாருக்கு எஸ்.பி., அறிவுறுத்தி உள்ளார். திண்டிவனம் நாகலாபுரம் தரைப்பாலம் நேற்று முன்தினம் உடைந்து சேதமடைந்தது. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த பாலத்தை எஸ்.பி., சரவணன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, பாலத்தின் வழியாக பொதுமக்கள் ஆபத்தான முறையில் கடக்காமல் இருக்க போலீசார் கண்காணிக்க அவர் அறிவுறுத்தினார். தொடர்ந்து மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கும் வகாப் நகர், நத்தமேடு, டாக்டர் ராமதாஸ் நகர், மரக்காணம் ரோடு ஜங்ஷன் ஆகிய இடங்களில் ஆய்வு செய்தார். அந்த பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க நகராட்சி அதிகாரிகளை அறிவுறுத்துமாறு, போலீசாருக்கு உத்தரவிட்டார். அப்போது, டி.எஸ்.பி., பிரகாஷ், இன்ஸ்பெக்டர் விஜயகுமார் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ