/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / புதிய வழித்தடங்களில் பஸ் சேவை மஸ்தான் எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
புதிய வழித்தடங்களில் பஸ் சேவை மஸ்தான் எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
செஞ்சி: செஞ்சியில் இருந்து புதிய வழித்தடங்களில் பஸ் சேவையை மஸ்தான் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.செஞ்சியில் இருந்து திருவதிகுன்னம், மூலநெல்லிமலை, அம்மேரி, சண்டிசாட்சி, திருவத்திமலை ஆகிய வழி தடங்களில் புதிய பஸ் சேவை துவக்க விழா நடந்தது. அரசு போக்குவரத்து கழக விழுப்புரம் கோட்ட வணிகத்துறை துணை மேலாளர் சிவக்குமார் தலைமை தாங்கினார்.செஞ்சி பணிமனை மேலாளர் சுரேஷ் வரவேற்றார். மஸ்தான் எம்.எல்.ஏ., புதிய வழிதடங்களில் பஸ் சேவையை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஒன்றிய சேர்மன்கள் செஞ்சி விஜயகுமார், வல்லம் அமுதா குமார், ஒன்றிய செயலாளர்கள் இளம்வழுதி, நெடுஞ்செழியன், தொ.மு.ச., நிர்வாகிகள் லூர்து இமானுவேல், அரிகிருஷ்ணன், தியாகராஜன், காதர் நவாஸ், தமிழ்மணி, ராஜேந்திரன் மற்றும் தி.மு.க., நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.