உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பஸ் நிலையம், மருத்துவமனை பணிகள் கிடப்பில் திண்டிவனத்தை

பஸ் நிலையம், மருத்துவமனை பணிகள் கிடப்பில் திண்டிவனத்தை

திண்டிவனத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை சார்பில் ரூ.25 கோடி மதிப்பில், சென்னை சாலையில் புதிய பஸ் நிலையம் கட்டும் பணி, கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அமைச்சராக இருந்த மஸ்தான் துவக்கி வைத்தார்.பணிகள் 90 சதவீதம் முடிந்துள்ளது. பஸ் நிலைய வளாகத்திற்குள் தார் சாலை அமைத்தல் உள்ளிட்ட 10 சதவீத பணிகளை முடித்து எப்போது திறக்கப்படும் என்ற கேள்வி எழுந்தது. கருணாநிதி பிறந்த நாளான இன்று (3ம் தேதி) திறக்கப்படும் என தி.மு.க.வினர் தெரிவித்தனர். ஆனால், திறப்பு விழா தேதி அறிவிக்கப்படவில்லை. அதுபோல் திண்டிவனம், தலைமை அரசு மருத்துவமனை ரூ.60 கோடி செலவில் கட்டப்பட்டு வருகிறது. இப்பணிகளையும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் அமைச்சராக இருந்த மஸ்தான் துவக்கி வைத்தார். மே மாதம் முடிய வேண்டிய பணி தற்போதும் நீண்டு வருகிறது. இரு பணிகளை துவக்கி வைத்த மஸ்தான் அமைச்சராக இருந்தபோது, அடிக்கடி அப்பணிகளை பார்வையிட்டு விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி வந்தார். அவரது அமைச்சர் பதவியும், பொன்முடி அமைச்சர் பதவியும் பறிக்கப்பட்டது. அதன்பிறகு மருத்துவமனை, பஸ் நிலைய பணிகள் கிடப்பில் போடப்பட்டது. இரு பணிகளும் எப்படி நடக்கிறது என்பதை கேட்டு விரைவுப்படுத்த மாவட்டத்தில் அமைச்சர் யாரும் இல்லை. இதனால் பஸ் நிலையம், மருத்துவமனை பணிகள் முழுமையாக முடிந்து திறப்பு விழா நடப்பது கேள்வி குறியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி