உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஸ்கூட்டி மீது பைக் மோதி சி.ஏ., மாணவி பரிதாப பலி

ஸ்கூட்டி மீது பைக் மோதி சி.ஏ., மாணவி பரிதாப பலி

செஞ்சி: ஆந்திர மாநிலம், நல்லுாரைச் சேர்ந்தவர் ஜலாமுடி மீரா பாபு மகள் ஸ்ரீஜா, 21; இவர், சென்னையில் தங்கி சி.ஏ., படித்து வந்தார். நேற்று முன்தினம் ஸ்ரீஜாவும், அவரது நண்பரான திருவள்ளூரைச் சேர்ந்த சங்கர், 22, என்பவரும் திருவண்ணாமலைக்கு பைக்கில் வந்தனர். மாலை 7:00 மணியளவில் செஞ்சி அடுத்த தொட்டியூர் கூட்ரோடு அருகே வந்தபோது, வடபுத்துார் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் மனைவி கீதா, 34, ஓட்டி வந்த ஸ்கூட்டி மீது பைக் மோதியது. ஸ்ரீஜா, கீதா, அவரது மகள் யாழினி, 8, படுகாயமடைந்தனர். அவர்களை சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சை பலனின்றி ஸ்ரீஜா நேற்று அதிகாலை இறந்தார். செஞ்சி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி