குரூப் 2 முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புக்கு அழைப்பு
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட வேலை வாய்ப்பு மையத்தில் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 முதன்மைத் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு வரும் 7ம் தேதி நடக்கிறது.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம் மூலம் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 பிரிலீம்ஸ் தேர்வுக்கு கடந்த ஜூன் 20ம் தேதி 2,500 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியானது. இதையொட்டி, விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இந்த தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் கடந்த ஜூன் 26ம் தேதி முதல் ஆகஸ்ட் 23ம் தேதி வரையிலும், இலவச மாதிரி தேர்வுகள் கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி, செப்டம்பர் 2ம் தேதி முதல் 6ம் தேதி வரையிலும் நடந்தது.தொடர்ந்து, டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு வரும் 7ம் தேதி காலை 10:00 மணி முதல் விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது.இதில், பங்கேற்க விரும்புவோர், மாவட்ட வேலை வாய்ப்பு மையத்தை அணுகி இன்று 4ம் தேதிக்குள் பெயரை பதிந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.