மேலும் செய்திகள்
துாங்கிய குழந்தை இறப்பு போலீஸ் விசாரணை
19-Oct-2024
மரக்காணம் : புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தை சேர்ந்தவர் ஹரி (எ) ஹரிசாய்ராம்,40; பத்திரிகை நிறுவனத்தில், செய்தி பிரிவின் பொது மேலாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு மனைவி, ஒரு மகன், மகள் உள்ளனர்.இவர் நேற்று தனது பிறந்த நாளையொட்டி சென்னை சென்றுவிட்டு, இரவு டி.என்.19-எப்-3434 பதிவெண் கொண்ட இனோவா காரில், இ.சி.ஆர்., வழியாக புதுச்சேரிக்கு திரும்பிக் கொண்டிருந்தார். இரவு 8:30 மணிக்கு, மரக்காணம் அடுத்த செட்டி நகர் அருகே சென்றபோது, எதிரே, புதுச்சேரி மார்க்கத்தில் இருந்து தனியார் கம்பெனியில் வேலை செய்யும் பெண்கள் 11 பேரை ஏற்றிக் கொண்டு வந்த டிஎன்.20 ஏஎச் 6048 பதிவெண் கொண்ட மேக்ஸ் கேப் வேன், மோதி சாலையோரம் கவிழ்ந்தது.இந்த விபத்தில், காரை ஓட்டிச் சென்ற ஹரிசாய்ராம் படுகாயமடைந்தார். அவரை அப்பகுதி மக்கள் மீட்டு காலாப்பட்டு பிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அவரை டாக்டர்கள் பரிசோதித்தபோது ஏற்கனவே இறந்துவிட்டதை உறுதி செய்தனர்.இந்த விபத்தில் படுகாயமடைந்த வேன் டிரைவர் மரக்காணம் கழிக்குப்பத்தை சேர்ந்த தாஸ்,21; மற்றும் 11 பெண்களும் பிம்ஸ் மற்றும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மரக்காணம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
19-Oct-2024