சென்டர் மீடியனில் கார் மோதி விபத்து : ஆடு மேய்த்தவர் பலி
வானுார் : கிளியனுார் அருகே சென்டர் மீடியனில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த நபர் மீது, தறிகெட்டு ஓடிய கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் நோக்கி நேற்று மாலை ஹோண்டா வெர்னா கார் சென்று கொண்டிருந்தது. இந்த கார் தென்கோடிப் பாக்கம் - அருவாப்பாக்கம் இடையே சென்ற போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீனியன் மீது ஏறி, ஆடு மேய்த்துக் கொண்டிருந்த நபர் மீது மோதியது. இதில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த, தென்கோடிப்பாக்கம் மெயின் ரோட்டை சேர்ந்த அங்கப்பன், 55; என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், ஒரு ஆடும் உயிரிழந்தது. தகவலறிந்த கிளியனுார் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கணபதி செட்டிக்குளம் பிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், காருக்குள் காயமடைந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.