பெண்ணிடம் தகராறு 6 பேர் மீது வழக்கு
விழுப்புரம் : மனைவியிடம் தகராறு செய்தவர்களை தட்டிக்கேட்ட கணவரை தாக்கிய 6 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.வளவனுார் அடுத்த சின்னகுச்சிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் கலைவாணன், 28; கூலித் தொழிலாளி. இவரது மனைவியிடம் அப்பகுதியைச் சேர்ந்த கமல், 25; ராகுல், 23; விஷ்வா, 21; அபிஷேக், 21; ஆகியோர் தகராறு செய்துள்ளனர்.இதனை தட்டிக்கேட்ட கலைவாணனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.இதுகுறித்து கலைவாணன் கொடுத்த புகாரின் பேரில் கமல், இவரது தாய் சின்னபொண்ணு, ராகுல், விஷ்வா, அபிஷேக், குமார் ஆகியோர் மீது, வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.