உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விழுப்புரத்தில் சாலை மறியல் 24 விவசாயிகள் மீது வழக்கு

விழுப்புரத்தில் சாலை மறியல் 24 விவசாயிகள் மீது வழக்கு

விழுப்புரம்: விழுப்புரத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் 24 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.விழுப்புரம் மாவட்டத்தில், மாதம் தோறும் நடந்து வரும் விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் இந்த மாதம் நடத்தப்படாததை கண்டித்து மாவட்ட விவசாய சங்கத்தினர், நேற்று முன்தினம் மதியம், விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் எதிரே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பெஞ்சல் புயல் நிவாரணம், பயிர் காப்பீடு தொகை வழங்கவில்லை என கலெக்டரை கண்டித்து கோஷமிட்டனர்.இந்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட, விழுப்புரம் மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்க தலைவர் கலிவரதன் உள்ளிட்ட 24 பேர் மீது, விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை