உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பெண்ணை தாக்கிய 3 பேர் மீது வழக்கு 

பெண்ணை தாக்கிய 3 பேர் மீது வழக்கு 

வானுார் : பெண்ணை சரமாரியாக தாக்கிய 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.திருவக்கரை அடுத்த எறையூர் மேட்டு தெருவைச் சேர்ந்தவர் பத்மா, 53; இவர் வீட்டின் எதிரே சிமெண்ட் தரை அமைத்திருந்தார். இந்த தரையை அதே பகுதியைச் சேர்ந்த தேவி என்பவரின் மகன் உடைத்தார். இதனை பத்மா, தேவி வீட்டிற்கு சென்று தட்டிக்கேட்டார்.அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த தேவி மற்றும் அவரது உறவினர்கள் சாந்தி, அவரது தாய் தெய்வராணி ஆகியோர் பத்மாவை தாக்கினர்.இது குறித்து பத்மா கொடுத்த புகாரின் பேரில், தேவி, சாந்தி, தெய்வராணி ஆகிய 3 பேர் மீது வானுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை