உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / இடம் பிரச்னை 3 பேர் மீது வழக்கு

இடம் பிரச்னை 3 பேர் மீது வழக்கு

வானுார் : கிளியனுார் அருகே இடம் பிரச்னையில் 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.கிளியனுார் அடுத்த கொடூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜகோபால், 43; அதே பகுதியைச் சேர்ந்தவர் வினோதா. இருவருக்குமிடையே இடம் பிரச்னை இருந்து வந்தது.கடந்த 13ம் தேதி வினோதா, ராஜகோபாலின் மனைவி தனலட்சுமியை திட்டி, கொலை மிரட்டல் விடுத்தார். இதனால், இரு குடும்பத்தினரும் தாக்கிக் கொண்டனர்.இதுகுறித்து இரு தரப்பினரும் அளித்த புகாரின் பேரில், வினோதா, தனலட்சுமி, ராஜகோபால் ஆகியோர் மீது கிளியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ