உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சிறுவனை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

சிறுவனை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

விழுப்புரம்: செஞ்சி அடுத்த காரை கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார், 40; இவர் உடல்நிலை பாதிக்கப்பட்ட தனது தந்தை கோவிந்தராஜ் என்பவரை, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்து கவனித்து வருகின்றார். அவரது தம்பி பரசுராமன், 35; என்பவர் தந்தையை பார்க்கவில்லை என விஜயகுமார் மனைவி சுந்தரவள்ளி, 39; என்பவர் கூறியுள்ளார். இதனால், பரசுராமன், அவரது மனைவி ஜெயபிரதா, 27; மற்றும் உறவினர் ஜெயபால், 55; அவரது மகன் குணா, 31; ஆகியோர் சேர்ந்து சுந்தரவள்ளியிடம் தகராறில் ஈடுபட்டனர். இதை தட்டிக்கேட்ட விஜயகுமாரின், 17 வயது மகனை பரசுராமன் உள்ளிட்டோர் திட்டி தாக்கி மிரட்டல் விடுத்தனர்.அனந்தபுரம் போலீசார், வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை