மேலும் செய்திகள்
அனுமதியின்றி போராட்டம் பா.ஜ., வினர் மீது வழக்கு
19-Mar-2025
விழுப்புரம், : விழுப்புரம் அருகே டாஸ்மாக் கடையின் சுவற்றில், தி.மு.க., அரசை விமர்சித்து போஸ்டர் ஒட்டிய பா.ஜ., மகளிரணியினர் 5 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.தமிழகம் முழுதும் டாஸ்மாக் மது விற்பனை முறைகேட்டை கண்டித்து, பா.ஜ., வினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விழுப்புரம் அடுத்த அனிச்சம்பாளையம் டாஸ்மாக் கடையின் சுவற்றில் பா.ஜ.,வினர் போஸ்டர்களை ஒட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.அந்த போஸ்டரில், முதல்வர் படத்துடன் 'உனக்கு குடி; எனக்கு கோடி' என வாசகத்துடன் விமர்சித்திருந்தனர்.இதுகுறித்து, டாஸ்மாக் சூப்பர்வைசர் சங்கர் கொடுத்த புகாரின் பேரில், பா.ஜ., மாவட்ட மகளிரணி செயலாளர் ஸ்ரீதேவி, நகர செயலாளர் ஹாத்தியா பானு, துணைத் தலைவர் சுபா, பார்த்திபன், விஜயன் உள்ளிட்ட 5 பேர் மீது, விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
19-Mar-2025