மேலும் செய்திகள்
விழுப்புரம் அருகே ஊராட்சி செயலர் வெட்டிக்கொலை
05-Jul-2025
விழுப்புரம் : விழுப்புரத்தில் மோதல் சம்பவத்தில், 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து, 3 பேரை கைது செய்தனர்.விழுப்புரம் பவர் அவுஸ் சாலையை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன், 49; இவர், தனது ஆட்டோவை, மல்லிகைபட்டு கிராமத்தை சேர்ந்த முனுசாமி மகன் அய்யனாருக்கு வாடகைக்கு விட்டார்.இந்நிலையில் கடந்த, 13ம் தேதி இரவு விழுப்புரம் ரயில் நிலையம் எதிரே, ஆட்டோ ஸ்டாண்டில், நவநீதகிருஷ்ணன், அய்யனார் இருவரும் நின்றிருந்தனர். அப்போது, அங்கு குடி போதையில் வந்த விழுப்புரம் வி.மருதுார் பகுதியை சேர்ந்த சேகர் மகன் சதீஷ்குமார், 25; ஆட்டோவை ஓரமாக நிறுத்தமாட்டீர்களா எனக்கேட்டு, அங்கு நின்றிருந்த நவநீதகிருஷ்ணன், அய்யனாரை தாக்கி ஆட்டோவின் முன் பக்க கண்ணாடியையும் உடைத்து, மிரட்டினார்.இதனால் ஆத்திரமடைந்த இருவரும் சதீஷ்குமார் மற்றும் அவரது நண்பர் குமார் ஆகிய இருவரை தட்டி கேட்டு தாக்கினர். இரு தரப்பினரும் மோதிக்கொண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.இது குறித்து, இரு தரப்பினர் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் டவுன் போலீசார், 7 பேர் மீது வழக்கு பதிந்தனர். சதீஷ்குமார், குமார், அய்யனார் ஆகியோரை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
05-Jul-2025