உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஜல்லி கொட்டியதால் தகராறு 8 பேர் மீது வழக்கு

ஜல்லி கொட்டியதால் தகராறு 8 பேர் மீது வழக்கு

விழுப்புரம்: வளவனுார் அருகே ஜல்லி கொட்டிய தகராறில் இரு தரப்பை சேர்ந்த, 8 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர். வளவனுார் அருகே மாங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரவள்ளி,60; இவரது வீட்டிற்கு எதிரே, ஆறுமுகம் மனைவி ரதி,42; மற்றும் நாராயணன், குரு, பாப்பாத்தி ஆகியோர் வசித்து வருகின்றனர். கடந்த 23ம் தேதி சுந்தரவள்ளி அவரது வீட்டிற்கு முன்பு, ஜல்லியை கொட்டினார். இதனால், ரதி உட்பட நால்வரும் அவர்களின் வீட்டிற்கு செல்ல முடியாததால், ஆத்திரத்தில் சுந்தரவள்ளியை திட்டி, தாக்கினர். இதையடுத்து, சுந்தரவள்ளி தரப்பை சேர்ந்த அருள், செந்தில், சரவணன், மகா ஆகியோர் ரதி தரப்பினரை தாக்கினர். இரு தரப்பு புகாரில், வளவனுார் போலீசார் ரதி, அருள் உட்பட 8 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !