உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தம்பதியை தாக்கிய கவுன்சிலர் மீது வழக்கு

தம்பதியை தாக்கிய கவுன்சிலர் மீது வழக்கு

வானுார்: வானுார் அருகே தம்பதியை தாக்கிய அ.தி.மு.க., பெண் கவுன்சிலர் உட்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.வானுார் அடுத்த எறையூர் புதுகாலனியைச் சேர்ந்தவர் தமிழ்மணி, 40; டிரைவர். இவரது மனைவி கலைச்செல்வி. இவர், கடந்த 20ம் தேதி தெருவில் உள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் பிடித்துள்ளார். அப்போது அங்கு வந்த எதிர் வீட்டைச் சேர்ந்த அ.தி.மு.க., கிளைச் செயலாளர் தர்மேந்திரன், அவரது மனைவியான ஒன்றிய கவுன்சிலர் ஜெகதீஸ்வரி ஆகியோர் தமிழ்மணி, கலைச்செல்வியிடம், தண்ணீரை வீணாக்குவதை கண்டித்தனர். இதனால், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.இதில், ஆத்திரமடைந்த தர்மேந்திரன், ஜெகதீஸ்வரி, இவர்களது 15 வயது மகன் ஆகியோர் சேர்ந்து, தமிழ்மணி, கலைச்செல்வி ஆகிய இருவரையும் தாக்கி மிரட்டல் விடுத்துள்ளனர்.இது குறித்து தமிழ்மணி கொடுத்த புகாரின் பேரில், தர்மேந்திரன், ஜெகதீஸ்வரி, 15 வயதுடைய மகன் ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ