கத்தியை காட்டி மிரட்டிய ரவுடி மீது வழக்கு
விழுப்புரம் : கத்தியை காட்டி இளைஞர்களை மிரட்டிய ரவுடி மீது போலீசார் வழக்கு பதிந்தனர். விழுப்புரம், கீழ்ப்பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த ஜெயபால் மகன் பத்மநாபன், 37; இவர், கடந்த 5ம் தேதி இரவு தனது நண்பர்களுடன், அதே பகுதியை சேர்ந்த ரவுடி பங்க் ராஜா, 39; வீட்டின் முன்பு, பேசிக்கொண்டிருந்தார். அப்போது, வெளியே வந்த பங்க் ராஜா, 'ஏன், எனது வீட்டு முன்பு நிற்கிறீர்கள்?' என கேட்டு, கத்தியை காட்டி மிரட்டி தகராறு செய்தார். இது குறித்த புகாரின் பேரில், விழுப்புரம் டவுன் போலீசார், அவர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.