உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தாயை தாக்கிய மகன் மீது வழக்கு

தாயை தாக்கிய மகன் மீது வழக்கு

வானுார்,: குடிபோதையில் தாய், சகோதரனை தாக்கிய வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிந்தனர். வானுார் அடுத்த ஆகாசம்பட்டு சீனுவாசன் நகரைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் மனைவி பொம்மி, 52; இவர்களது மூத்த மகன் வீரப்பன், 30; இவர் நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் தாய் பொம்மியிடம் புதிய வீடு கட்டுவது தொடர்பாக கேட்டு தகராறு செய்து, தாக்கியுள்ளார். தட்டிக்கேட்ட அவரது தம்பி விக்னேஷ், 28; என்பவரையும் தாக்கி மிரட்டல் விடுத்தார். படுகாயமடைந்த இருவரும், புதுச்சேரி கதிர்காமம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். புகாரின் பேரில் வானுார் போலீசார் வீரப்பன் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை