உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தம்பதியை தாக்கிய மூவர் மீது வழக்கு

தம்பதியை தாக்கிய மூவர் மீது வழக்கு

விழுப்புரம் : தம்பதியை தாக்கிய மூன்று பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். விழுப்புரம் அடுத்த மரகதபுரத்தை சேர்ந்தவர் விஜயகுமார், 24; இவரது வீட்டிற்கு, சிறுமதுரையை சேர்ந்த நண்பர் அஜித்குமார் அடிக்கடி வந்து சென்றார். அதே பகுதியை சேர்ந்த சிவக்குமார், தன் மகளை அஜித்குமார் காதலிப்பதாகவும், அதனால், உங்கள் வீட்டிற்கு அஜித்குமார் வரக்கூடாது என விஜயகுமாரிடம் கூறினார். இதனால், கடந்த 3ம் தேதி ஏற்பட்ட தகராறில் சிவக்குமார், அவரது மனைவி மஞ்சுளா, உறவினர் கணேசன் ஆகியோர் சேர்ந்து விஜயகுமார், அவரது மனைவி சமுத்திரவள்ளி, 19; ஆகியோரை திட்டி தாக்கி மிரட்டல் விடுத்தனர்.விஜயகுமார் புகாரின்பேரில், சிவக்குமார் உள்ளிட்ட மூன்றுபேர் மீது விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை