உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தொழிலாளியை தாக்கிய இருவர் மீது வழக்கு

தொழிலாளியை தாக்கிய இருவர் மீது வழக்கு

வானுார்: வானுார் அருகே பைக்கில் வேகமாக சென்றது தொடர்பாக கல்குவாரி தொழிலாளியை தாக்கிய சிறுவன் உட்பட இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.வானுார் அடுத்த திருவக்கரை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கங்காதரன் மகன் விக்னேஷ்வரன், 29; இவர் கடந்த 23ம் தேதி கல்குவாரியில் வேலை முடித்து விட்டு பைக்கில் வீட்டிற்கு திரும்பினார். எறையூர் அருகே சென்றபோது, அதே பகுதியைச் சேர்ந்த கருணாகரன் மகன் புளிப்பாண்டி, 22; அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகியோர் வழிமறித்து, ஏன் வேகமாக செல்கிறாய் என கேட்டனர்.இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த புளிப்பாண்டி, சிறுவன் இருவரும் சேர்ந்து விக்னேஷ்வரனை தாக்கி, ஆபாசமாக திட்டினர். விக்னேஷ்வரனுக்கு மூக்கில் பலத்த காயம் ஏற்பட்டது. இது குறித்து விக்னேஷ்வரன், வானுார் போலீசில் புகார் அளித்தார். போலீசார் சிறுவன் உட்பட இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை