பரையந்தாங்கலில் சி.சி.டி.வி., கேமராக்கள்
அவலுார்பேட்டை; பரையந்தாங்கல் கிராமத்தில் கண்காணிப்பு கேமராக்களை எஸ்.பி., சரவணன் இயக்கி வைத்தார். மேல்மலையனுார் அடுத்த பரையந்தாங்கல் ஊராட்சியில் புதிதாக அமைக்கப்பட்ட சி.சி.டி.வி., கேமராக்கள் திறப்பு விழா நடந்தது. விழுப்புரம் எஸ்.பி., சரவணன் தலைமை தாங்கி கேமராக்களின் செயல்பாட்டை, குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து, பேசினார். செஞ்சி டி.எஸ்.பி., ரமேஷ்ராஜ் முன்னிலை வகித்தார். ஊராட்சி தலைவர் ஏழுமலை வரவேற்றார். இதில் மேல்மலையனுார் போலீஸ் இன்ஸ்பெக்டர் வினதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.