மத்திய மாவட்ட தி.மு.க., பொதுக்கூட்டம்
விழுப்புரம் : விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில், 'ஓரணியில் தமிழ்நாடு பொதுக்கூட்டம்' இன்று நடக்க உள்ளதாக, மத்திய மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., தெரிவித்துள்ளார்.அவர் விடுத்த செய்திக்குறிப்பு:மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில் ஓரணியில் தமிழ்நாடு பொதுக்கூட்டம் இன்று மாலை 5:00 மணிக்கு, விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் நகராட்சி திடலில் நடக்கிறது.மாவட்ட பொருளாளர் ஜனகராஜ் தலைமை தாங்குகிறார். மாநில ஆதிதிராவிட நலக்குழு இணை செயலாளர் புஷ்பராஜ் வரவேற்கிறார்.நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள், சேர்மன்கள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் முன்னிலை வகிக்கின்றனர்.லட்சுமணன் எம்.எல்.ஏ., தொகுதி பொறுப்பாளர் சரவணன், வானூர் தொகுதி பொறுப்பாளர் கருணாநிதி மற்றும் தலைமை பேச்சாளர் சுஜாதா ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர்.மாவட்ட துணை செயலாளர் இளந்திரையன் நன்றி கூறுகிறார்.இந்த கூட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள், மாவட்ட அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.