மேலும் செய்திகள்
தி.மு.க., அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்
04-Aug-2025
விழுப்புரம், : விழுப்புரத்தில் மத்திய மாவட்ட தி.மு.க., இளைஞரணி ஆலோசனை கூட்டம் நடக்கிறது. மத்திய மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., அறிக்கை: விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., இளைஞரணி மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம், இன்று காலை 9:30 மணிக்கு, விழுப்புரம், கலைஞர் அறிவாலயத்தில் நடக்கிறது. மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., தலைமையில் நடைபெற உள்ள இக்கூட்டத்தில், மாநில இளைஞரணி துணை செயலாளர் அப்துல்மாலிக் கலந்துகொண்டு, ஆலோசனை வழங்குகிறார். இக்கூட்டத்தில், அனைத்து கிளை மற்றும் வார்டுகளின் இளைஞரணி அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள் நியமிப்பது குறித்தும், புதியதாக பிரிக்கப்பட்ட நகர, ஒன்றியங்களுக்கு இளைஞரணி நிர்வாகிகள் தேர்வு செய்வது தொடர்பாகவும், பாக இளைஞரணி நிர்வாகிகளுக்கு, சமூக வலைதள பயிற்சி கூட்டம் நடத்துவது மற்றும் இளைஞரணியின் ஆக்கப்பணிகள் குறித்தும் ஆலோசனை வழங்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் மாநில, மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், நகர, ஒன்றிய மற்றும் பேரூர் செயலாளர்கள், பெருந்தலைவர்கள், இளைஞணி மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
04-Aug-2025