துாங்கிய பெண்ணிடம் செயின் பறிப்பு
மயிலம்; மயிலம் அருகே வீட்டில் துாங்கிக் கொண்டிருந்த பெண்ணின் தாலிச் செயினை பறித்துச் சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.மயிலம் அடுத்த சிங்கனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் மனைவி விஷ்ணு பிரியா, 28; இவர் சிங்கனுார் எம்.ஆர். நகரில் உள்ள தாய் வீட்டில் துாங்கிக் கொண்டிருந்தார். நேற்று முன்தினம் அதிகாலை 3:00 மணியளவில் மர்ம நபர், வீடு புகுந்து 4 சவரன் தாலிச் செயினை பறித்தார். திடுக்கிட்டு எழுந்த விஷ்ணுபிரியா கூச்சலிட்டதைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் மர்ம நபர் செயினுடன் தப்பியோடினார்.புகாரின் பேரில் மயிலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.