மூதாட்டியிடம் செயின் பறிப்பு
விக்கிரவாண்டி; வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் 2 சவரன் செயின் பறித்த மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர். விக்கிரவாண்டி அடுத்த பாப்பனப்பட்டு, பொன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பூரணி,80; இவர் தனது மகள் செல்வி நிலத்து பகுதியில் கட்டிய வீட்டில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது வீடு புகுந்து மர்ம நபர் ஒருவர் பூரணி கழுத்தில் அணிந்திருந்த 2 சவரன் செயினை பறித்து சென்றார். விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.