உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  இறகுப்பந்து போட்டியில் சாம்பியன்: அரசு பள்ளி மாணவருக்கு பாராட்டு

 இறகுப்பந்து போட்டியில் சாம்பியன்: அரசு பள்ளி மாணவருக்கு பாராட்டு

விழுப்புரம்: மாநில இறகுப்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று வந்த விழுப்புரம் அரசு பள்ளி மாணவரை பாராட்டி பரிசளிக்கப்பட்டது. விழுப்புரத்தில் தமிழக துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாளை முன்னிட்டு, மாநில அளவிலான ஆடவர், இரட்டையர் பேட்மின்டன் போட்டிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்தது. கலெக்டர் பெருந்திட்ட வளாக உள் விளையாட்டரங்கில் நடந்த போட்டியில் வென்றவர்களுக்கு பரிசளிக்கப்பட்டது. விழுப்புரம் மத்திய மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., பரிசு கோப்பைகள் வழங்கி பாராட்டினார். அப்போது, மாநில அளவிலான இறகுப் பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று வந்த விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த காணை அரசு மேல்நிலை பள்ளி பத்தாம் வகுப்பு மாணவர் கோவிந்த்கிருஷ்ணனுக்கு பதக்கமும், நினைவு பரிசும் வழங்கி பாராட்டினார். மாணவர் கோவிந்த்கிருஷ்ணன், சிவகாசியில் நடந்த மாநில அளவிலான இறகுபந்து போட்டியில் முதலிடம் பிடித்து பதக்கம் வென்றார். மேலும், மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று, 10க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்றதற்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. உடன் பயிற்சியாளர் சதாசிவம், மாணவரின் தந்தை கோகுல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ