மேலும் செய்திகள்
எல்லையம்மன் கோவில் தேர் திருவிழா
08-May-2025
விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த சுருங்காலிப்பட்டு முத்தால்வாழியம்மன் கோவில் தேர் திருவிழா நடந்தது. விழாவையொட்டி, கடந்த 1ம் தேதி கொடியேற்றம் மற்றும் காமதேனு வாகனத்தில் அம்மன் வீதியுலா நடந்தது. தொடர்ந்து, இரண்டாம் நாள் சிங்க வாகனத்திலும், நேற்று முன்தினம் 8 ம் நாள் உற்சவத்தில் குதிரை வாகனத்தில் அம்மன் வீதியுலா நடந்தது. 9ம் நாளான நேற்று முத்தால்வாழியம்மன், விநாயகர் தேரோட்டம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.
08-May-2025