உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / முதல்வர் ஸ்டாலின் விழுப்புரம் வருகை; வடக்கு மாவட்டத்திற்கும் முன்னுரிமை

முதல்வர் ஸ்டாலின் விழுப்புரம் வருகை; வடக்கு மாவட்டத்திற்கும் முன்னுரிமை

விழுப்புரம் மாவட்டத்திற்கு வரும் 28 மற்றும் 29ம் தேதி முதல்வர் ஸ்டாலின் அரசு நிகழ்ச்சிகள் மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.இதற்காக வரும் 28ம் தேதி சென்னையிலிருந்து வரும் முதல்வர் ஸ்டாலின், திண்டிவனம் மயிலம் சாலையில் உள்ள ஜே.வி.எஸ்.திருமண மண்டபத்தில் நடைபெறும் ஒருங்கிணைந்த விழுப்புரம் தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட தி.மு.க., நிர்வாகிகள் பங்கேற்கும் கூட்டத்தில் பேசுகிறார்.இரண்டு நாள் நிகழ்ச்சியில், 28ம் தேதி திண்டிவனத்திலும், 29ம் தேதி கோவிந்தசாமி மணி மண்டபம் திறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, எல்லீஸ்சத்திரத்தில் அணை திறப்பு விழா என அனைத்து நிகழ்ச்சியும் விழுப்புரம் தெற்கு மாவட்டத்தில் நடக்கிறது.கட்சி ரீதியாக விழுப்புரம் தெற்கு மற்றும் வடக்கு மாவட்டமாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் தெற்கு மாவட்டத்தில் அதிக நிகழ்ச்சி உள்ள நிலையில், விழுப்புரம் வடக்கு மாவட்டத்திற்கு ஒரு நிகழ்ச்சியை ஒதுக்க வேண்டும் என்ற நோக்கத்தில், கட்சி நிர்வாகிகள் சந்திக்கும் நிகழ்ச்சி, விழுப்புரம் வடக்கு மாவட்டத்திலுள்ள திண்டிவனத்தில் நடபெற உள்ளது.இதை கருத்தில் கொண்டுதான், விழுப்புரம் தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், திண்டிவனத்தில் 28ம் தேதி நடப்பதற்கு முதல்வர் முன்னுரிமை கொடுத்துள்ளார் என கட்சி வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.விழுப்புரம் வடக்கு மாவட்டத்தில் உள்ள திண்டிவனத்திற்கு முதல்வர் வருகை தருவது, வடக்கு மாவட்ட தி.மு.க., நிர்வாகிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை