மேலும் செய்திகள்
முதல்வர் ஸ்டாலினுக்கு தி.மு.க.,வினர் வரவேற்பு
22-Feb-2025
கோட்டகுப்பம்; கோட்டக்குப்பம் நகர தி.மு.க., சார்பில், முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.சின்ன கோட்டக்குப்பத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு நகர்மன்ற தலைவர் ஜெயமூர்த்தி தலைமை தாங்கினார். விழாவில் விழுப்புரம் மத்திய மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் ஏழை, எளியோர் ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி, சிறப்புரையாற்றினார்.இதில், மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், முன்னாள் எம்.எல்.ஏ., புஷ்பராஜ், நகர பொருளாளர் தட்சிணாமூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் முரளி, ராஜூ, மைதிலி ராஜேந்திரன், ஒன்றிய சேர்மன்கள் உஷா, வாசன், துணை சேர்மன்கள் பருவகீர்த்தனா விநாயகமூர்த்தி, ஜீனத் பீவி முபாரக், முன்னாள் ஒன்றிய சேர்மன் சிவா, மருத்துவர் அணி துணை அமைப்பாளர் வினோ பாரதி, மீனவர் அணி அமைப்பாளர் மணி, கவுன்சிலர் சரவணன், நகர துணை செயலாளர் பாபு, மாவட்ட பிரதிநிதிகள் பஷீர், தேசப்பன், முன்னாள் கவுன்சிலர் வரதன், சிறுபான்மை அணி அன்வர் பாஷா, கிளை செயலாளர் அசோகன், விளையாட்டு மேம்பாட்டு அணி சத்யா, தொண்டரணி அமைப்பாளர் வரதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
22-Feb-2025