உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள்: கலெக்டர் ஆய்வு

குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள்: கலெக்டர் ஆய்வு

விழுப்புரம் : விழுப்புரத்தில், குழந்தை வளர்ச்சி பணிகள் துறை செயல்பாடுகள் குறித்த மாதாந்திர ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்திற்கு, கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கி பேசியதாவது: மாவட்டத்தில் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு உடைய குழந்தைகள் பற்றிய விபரங்களையும், அதற்கான காரணிகளையும் ஆரம்ப நிலையிலேயே சரி செய்திடும் வகையில் கர்ப்ப கால பராமரிப்பினை முறையாக பின்பற்ற வேண்டும். வட்டாரத்திற்கு ஒரு அங்கன்வாடி மையத்தினை மாதிரி அங்கன்வாடி மையமாக தரம் உயர்த்திட அனைத்து குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்கன்வாடி மைய கட்டடங்கள் கட்டப்பட்ட ஆண்டுவாரியாக விபர அறிக்கை தயார் செய்ய வேண்டும். அங்கன்வாடி மையங்களில் அடிப்படை வசதிகளை உறுதிப்படுத்திட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். ஆய்வுக் கூட்டத்தில், மாவட்ட திட்ட அலுவலர் மற்றும் குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை