உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / இளைஞர்கள் நடத்திய கிரிக்கெட் போட்டி சிறுவர்கள் ஆர்வம்

இளைஞர்கள் நடத்திய கிரிக்கெட் போட்டி சிறுவர்கள் ஆர்வம்

வானுார்: கோட்டக்கரை கிராமத்தில், இளைஞர்கள் நடத்திய சிறுவர்களுக்கான டென்னிஸ் பால் கிரிக்கெட் போட்டியில் ஏராளமானோர் ஆர்வமுடன் பங்கேற்றனர். வானுார் அடுத்த கோட்டக்கரை கிராமத்தில், அப்பகுதி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில், சிறுவர்களுக்கான டென்னிஸ் பால் கிரிக்கெட் போட்டி நடந்தது. இதில், அப்பகுதியை சேர்ந்த சிறுவர்கள், 5 அணிகளாக பிரித்து விளையாடினர். நாக் அவுட் முறையில் நடத்தப்பட்ட போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடித்த அணிகளுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. முதல் மூன்று இடங்களை பிடித்த அணியிருக்கு சுழற்கோப்பை, போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் மெடல் வழங்கப்பட்டது.இது குறித்து அப்பகுதி இளைஞர்கள் கூறுகையில், கடந்த காலங்களில் கிரிக்கெட் போட்டியில் பல்வேறு கிராமங்களை சேர்ந்த இளைஞர்கள் விளையாடி வந்தனர். சமீப காலமாக தமிழகத்தில் போதை பொருட்களுக்கு அடிமையாகி விளையாட்டின் மீதான ஆர்வத்தை குறைத்து வருகின்றனர். எதிர்காலத்தில் விளையாட்டு என்ற வார்த்தையே மறையும் நிலை உருவாகி வருகிறது. இதனை மாற்றும் வகையில், நாங்கள், சிறுவர்களுக்கு கிரிக்கெட் போட்டி நடத்தி அவர்கள் மத்தியில் விளையாட்டின் மீதான ஆர்வத்தை அதிகரிக்க செய்யும் முயற்சி மேற்கொண்டு உள்ளோம் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை