மேலும் செய்திகள்
செயலர்கள் இல்லை ஊராட்சிகள் தவிப்பு
17-Mar-2025
விக்கிரவாண்டி; உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு, அய்யூர் அகரம் மதுரா சிந்தாமணியில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடந்தது.ஊராட்சி தலைவி வாசுகி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சுமதி, ஒன்றிய செயலாளர் ரவிதுரை முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் சத்தியமூர்த்தி வரவேற்று தீர்மானங்களை வாசித்தார். ஒன்றிய சேர்மன் சங்கீத அரசி ரவிதுரை பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்து, அய்யூர் அகரம் ஊராட்சியில் துணை ஊராட்சியாக உள்ள சிந்தாமணியை தனி ஊராட்சியாக அறிவிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். சுகாதார ஆய்வாளர் பாலாஜி, குமரேசன், மன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் பங்கேற்றனர்.
17-Mar-2025