உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வீட்டில் புகுந்த நாகபாம்பு மீட்பு

வீட்டில் புகுந்த நாகபாம்பு மீட்பு

வானுார்: வீட்டில் புகுந்த நாக பாம்பை தீயணைப்பு வீரர்கள் மீட்டு வனப்பகுதியில் விட்டனர். வானுார் அடுத்த இரும்பை மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மதன். இவரது வீட்டில் 4 அடி நீளமுள்ள நாக பாம்பு புகுந்தது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த வீட்டிலிருந்தவர்கள் அலறியடித்தபடி வெளியே ஓடி வந்தனர். தகவலறிந்த வானுார் தீயணைப்பு நிலைய வீரர்கள், சம்பவ இடத்திற்குச் சென்று வீட்டிற்குள் புகுந்த நாக பாம்பை மீட்டு, வனப்பகுதியில் விட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை