மேலும் செய்திகள்
நீச்சல் பயிற்சி முடித்தவருக்கு சான்றிதழ்
01-Jun-2025
விழுப்புரம்: விழுப்புரம் பெருந்திட்ட வளாக நீச்சல் குளத்தை கலெக்டர் திடீர் ஆய்வு செய்தார்.விழுப்புரம் கலெக்டர் பெருந்திட்ட வளாகத்தில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் நீச்சல் குளம் செயல்பட்டு வருகிறது. இதில், மாணவ, மாணவிகள் மற்றும் பொது மக்களுக்கு நீச்சல் பயிற்சி அளிக்கப்படுகிறது.இங்கு சிறியவர்கள், பெரியவர்களுக்கு என 2 நீச்சல் பயிற்சி குளங்களும், தண்ணீரை சுத்திகரிப்பு நிலையமும் உள்ளது. இந்த மையத்தில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை, நீச்சல் பயிற்றுநர்கள், ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளதாக பொது மக்கள் புகார் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், விழுப்புரம் கலெக்டர் ஷேக்அப்துல் ரஹ்மான், இந்த நீச்சல் குளத்திற்கு சென்று திடீர் ஆய்வு செய்தார். நீச்சல் குளத்தில் உள்ள நீர், சுத்திகரிக்கப்பட்டு சுகாதாரமாக உள்ளதா, தினசரி நீச்சல் பயிற்சி பெற்று வருபவர்கள் விவரம், அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.நீச்சல் குளம் நீரை குளோரினேஷன் செய்து துாய்மைப்படுத்த வேண்டும். சிறார்கள், பொது மக்கள் பாதுகாப்பான முறையில் நீச்சல் பயிற்சி மேற்கொள்ள நீச்சல் பயிற்றுநர், பாதுகாவலர்கள் உறுதி செய்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். ஆய்வின்போது, மாவட்ட விளையாட்டு அலுவலர் ஆழிவாசன் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.
01-Jun-2025