உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஓமந்துாரில் விளையாட்டு அரங்கம் இடம் குறித்து கலெக்டர் ஆய்வு

ஓமந்துாரில் விளையாட்டு அரங்கம் இடம் குறித்து கலெக்டர் ஆய்வு

வானுார் : ஓமந்துாரில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிறிய விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கான இடத்தை கலெக்டர் ஆய்வு செய்தார். புதுச்சேரி - திண்டி வனம் சாலையில், ஓமந்துார் கிராமத்தில், ஓ.பி.ஆர்., அரசு மேல்நிலைப்பள்ளி அருகே 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 400 மீட்டர் 8 வழி தடகள பாதை, உடற்பயிற்சி கூடம், உடை மாற்றும் அறைகள், கூடைபந்து, கைப்பந்து மைதானம், கோ-கோ விளையாட்டு மைதானம் உட்பட பல்வேறு வசதிகளுடன் கூடிய சிறிய விளையாட்டு அரங்கம் அமைப்பட உள்ளது. இந்த இடத்தை நேற்று கலெக்டர் ேஷக் அப்துல் ரஹ்மான் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து தென்கோடிப்பாக்கம் ஊராட்சியில், சிப்காட் தொழிற்பூங்கா அமைப்பதற்கான இடம் தேர்வு. பேராவூர் ஊராட்சியில், கனவு இல்லம் திட்டத்தின்கீழ் பயனாளிகளுக்கான வீடு, சிமென்ட் சாலை பணி, நல்லாவூர் ஊராட்சியில், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி பராமரிப்பு குறித்தும் கலெக்டர் ஆய்வு செய்தார். பின் நல்லாவூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம். கிளியனுார் ஊராட்சியில், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின்கீழ், பயனாளிகள் கட்டி வரும் வீடுகள். திருச்சிற்றம்பலம் மினி டைடல் பூங்கா மற்றும் வானுார் அரசு கல்லுாரிக்குச் செல்லும் சாலையை அகலப்படுத்தும் பணிகள் குறித்தும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது, திண்டி வனம் சப் கலெக்டர் ஆகாஷ், ஊரக வளர்ச்சித்துறை செயற் பொறியாளர் கண்ணன், தனித்துணை ஆட்சியர் (சிப்காட்) விஜயா, மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு நல அலுவலர் ஆழிவாசன், தாசில்தார்கள் திண்டிவனம் யுவராஜ், வானுார் வித்யாதரன், பி.டி.ஓ.,க்கள் மரக்காணம் சிலம்புச்செல்வன், வானுார் மணிவண்ணன், சுபாஷ் சந்திரபோஸ் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை