மேலும் செய்திகள்
மாநில இறகுபந்து போட்டி; விழுப்புரம் மாணவர் சாதனை
05-Jun-2025
விழுப்புரம் : விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள பல்நோக்கு உள்விளையாட்டரங்கில் அடிப்படை வசதிகள் குறித்து, நேற்று காலை கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் இயங்கும் விளையாட்டரங்கில் இறகு பந்து தளத்தில், 80க்கும் மேற்பட்டவர்கள் தினசரி இறகு பந்து விளையாடி வருகின்றனர். இங்கு மின்விளக்கு வசதி, குடிநீர், கழிப்பறை, மின்சாதனங்கள் நல்ல நிலையில் உள்ளதா மற்றும் துாய்மையாக பராமரிக்கப்பட்டு வருகிறதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.அப்போது, இறகு பந்து தரை தளத்தில் வார்னிஷ் அடித்திடவும், இறகு பந்து விளையாட்டுக்கென்று தனியாக ஒரு பயிற்றுநரை நியமித்து கலெக்டர் அறிவுறுத்தினார். மேலும், உள்விளையாட்டு அரங்கில் இறகு பந்து விளையாடுபவர்களிடம், மைதானத்தின் வசதிகள் குறித்து விசாரித்தார். ஆய்வின்போது, மாவட்ட விளையாட்டு அலுவலர் ஆழிவாசன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
05-Jun-2025