உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மாவட்டத்தில் புயல், மழை பாதிப்புகளை சீரமைக்க ரூ.1,863 கோடி அரசு நிதி ஒதுக்கிட கோரிக்கை கலெக்டர் பழனி தகவல்  

மாவட்டத்தில் புயல், மழை பாதிப்புகளை சீரமைக்க ரூ.1,863 கோடி அரசு நிதி ஒதுக்கிட கோரிக்கை கலெக்டர் பழனி தகவல்  

விழுப்புரம்: மாவட்டத்தில் பெஞ்சல் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைத்திட, ரூ. ஆயிரத்து 863.52 கோடி நிதி ஒதுக்கீடு கோரி, அரசுக்கு முன்மொழியப்பட்டுள்ளது.கலெக்டர் பழனி விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:விழுப்புரம் மாவட்டத்தில், பெஞ்சல் புயல் காரணமாக கடந்த நவ.29ம் தேதி முதல் டிச.3ம் தேதி வரை கனமழை பெய்தது. இதனால், மாவட்டத்தில் ஏற்பட்ட கடுமையான சேதங்களை தொடர்ந்து, உடனடி மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டது.புயல் மற்றும் ஆற்று வெள்ளப்பெருக்கில் 4 லட்சத்து 83 லட்சத்து 889 ரேஷன் கார்டுதாரர்கள் இதுவரையில் பாதிக்கப்பட்டதாக கண்டறியப்பட்டுள்ளது. அவர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம், மொத் தம் ரூ. 96.78 கோடி நிவாரணத் தொகை ரொக்கமாக வழங்கப்பட்டுள்ளது.மேலும், ரேஷன் கார்டிற்கு 5 கிலோ அரிசி, தலா ஒரு கிலோ சர்க்கரை மற்றும் பருப்பு வழங்கப்பட்டு வருகிறது.வேளாண் அலுவலர்கள் மூலம் அதிக கனமழை மற்றும் வெள்ளத்தால் மூழ்கிய பரப்பு 2,03,610 ஏக்கர் எனவும், ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 745 சிறு, குறு விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது. அதற்கான நிவாரணமாக ரூ.121.13 கோடிநிதி ஒதுக்கீடு கோரி அரசுக்கு முன்மொழியப்பட்டுள்ளது.புயல் காரணமாக மாவட்டத்தில், சாகுபடி செய்யப்பட்டிருந்த 48,132 ஏக்கர் பரப்பளவிலான தோட்ட பயிர்கள் மழைநீரில் மூழ்கியது. இதனால் 27 ஆயிரத்து 451 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். கள ஆய்வில் முடிவு செய்யப்பட்டு, அதற்கான நிவாரணமாக ரூ.41.31 கோடி நிதி ஒதுக்கீடு கோரி, அரசுக்கு முன்மொழியப்பட்டுள்ளது.மாவட்டத்தில் பெஞ்சல் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்திடும் பொருட்டு 10 துறைகளின் சார்பில், தற்காலிக சீரமைப்பு பணிகளுக்காக ரூ.106.78கோடி நிதியும், நிரந்தர சீரமைப்பு பணிகளுக்காக ரூ.1863.52 கோடி நிதி ஒதுக்கீடு கோரி அரசுக்கு முன்மொழியப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ