உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அரசு அலுவலர்களுடன் கலெக்டர் கலந்தாய்வு

அரசு அலுவலர்களுடன் கலெக்டர் கலந்தாய்வு

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி தாலுகாவில், 'உங்களைத் தேடி; உங்கள் ஊரில்' திட்டம் குறித்து அரசு அலுவலர்களுடன், கலெக்டர் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தினார்.விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, கலெக்டர் ேஷக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார். கூட்டத்தில், திட்டம் குறித்து ஆய்வு செய்த அதிகாரிகளுடன் ஒவ்வொரு பகுதியிலும் மேற்கொண்டுள்ள வளர்ச்சி திட்டப் பணிகள், கிராமங்களில் தேவையான அடிப்படை வசதிகள், ஆரம்ப சுகாதார நிலையம், ரேஷன் கடை, குடிநீர், தெருவிளக்கு வசதி உள்ளிட்டவைகள் குறித்தும் கேட்டறிந்தார்.தாலுகா அலுவலகத்தில் பொதுமக்களிடம் இலவச வீடு, வீட்டு மனைப்பட்டா, முதியோர், மாற்றுத்திறனாளி உதவித் தொகை குறித்து பெற்ற மனுக்களை துறை அலுவலர்களுக்கு அனுப்பி உடனடியாக தீர்வு காண உத்தரவிட்டார்.கூடுதல் கலெக்டர் பத்மஜா, சப் கலெக்டர் முகுந்தன், டி.ஆர்.ஓ., ஹரிதாஸ், ஆர்.டி.ஓ., முருகேசன், தாசில்தார் யுவராஜ், சமூக நல தாசில்தார் வேல்முருகன், மாவட்ட வழங்கல் அலுவலர் சந்திரசேகரன், வட்ட வழங்கல் அலுவலர் ராஜேஷ், தலைமையிடத்து துணை தாசில்தார் ஹரிதாஸ், மண்டல துணை தாசில்தார் தட்சணாமூர்த்தி உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !