உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி கலெக்டர் அலுவலகம் முற்றுகை

வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி கலெக்டர் அலுவலகம் முற்றுகை

விழுப்புரம்: அரியலுார் திருக்கை கிராமத்தினர், வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி, விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது. விழுப்புரம் அடுத்த அரியலுார் திருக்கை கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள், நேற்று காலை விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் முன் திரண்டனர். நுழைவு வாயில் பகுதியில் போலீசார் தடுத்ததால், முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், 'எங்கள் கிராமத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக 50 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். சொந்த வீடின்றி அரசு புறம்போக்கு இடத்தில் வீடு கட்டி வசித்து வருகிறோம். இந்த இடத்திற்கு வீட்டு வரி செலுத்தியும், மின் இணைப்பு வாங்கியும், ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை, தேசிய ஊரக வேலை அட்டையும் வைத்துள்ளோம். எங்களுக்கு இலவச மனைப் பட்டா வழங்க நீண்டகாலமாக போராடி வருகிறோம். ஏற்கனவே 10 பேருக்கு மனை பட்டா வழங்கியுள்ளனர். மீதமுள்ள 40 பேருக்கு பட்டா வழங்க கோரி வருகிறோம். இந்நிலையில், எங்கள் கிராமத்தைச் சேர்ந்த தனி நபர் ஒருவர், அந்த அரசு இடத்தை ஆக்கிரமிப்பதற்காக, நீர்நிலை புறம்போக்கு இடம் என கூறி, எங்களுக்கு பட்டா வழங்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். நீண்டகாலம் வசித்து வரும் 40 குடும்பத்தினருக்கும், அரசு மனைப் பட்டா வழங்க வேண்டும்' என்றனர். போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி, கலெக்டரிடம் மனு அளிக்குமாறு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து, அவர்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ