உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தட்சசீலா பல்கலைக் கழகத்தில் கல்வி ஆண்டு துவக்க விழா

தட்சசீலா பல்கலைக் கழகத்தில் கல்வி ஆண்டு துவக்க விழா

விழுப்புரம்: திண்டிவனம், ஓங்கூர் தட்சசீலா பல்கலைக் கழகத்தில் கல்வி ஆண்டு துவக்க விழா நடந்தது.விழாவிற்கு, பல்கலைக் கழக வேந்தர், ஸ்ரீ மணக்குள விநாயகர் மற்றும் மயிலம் கல்விக் குழுமத் தலைவர் தனசேகரன் தலைமை தாங்கினார். இணை வேந்தர்கள் ராஜராஜன், மருத்துவர் நிலா பிரியதர்ஷினி முன்னிலை வகித்தனர். மருத்துவ அறிவியல் புல முதன்மையர் ஜெயஸ்ரீ வரவேற்றார். துணை வேந்தர் விவேக் இந்தர் கோச்சர் வாழ்த்திப்பேசினார். பதிவாளர் செந்தில் சிறப்புரையாற்றினார்.சிறப்பு விருந்தினர் மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் சுகாதார கல்விக் கழக முதல்வர் தீபா சி பிலிப், இணைப் பதிவாளர் ராமலிங்கம், அகாடமிக் டீன் சுப்ரமணியன், கலை அறிவியல் துறையின் டீன் தீபா, பொறியியல் துறை டீன் சுபலட்சுமி, தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கோபாலக்கண்ணன் மற்றும் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர் நலன் பொறுப்பாளர், பல்கலைக் கழக அலுவலர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.சுகாதார கல்விப் புல பொறுப்பாளர் புவனேஸ்வரி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !