உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / இந்திய கம்யூ.,  தர்ணா 

இந்திய கம்யூ.,  தர்ணா 

கண்டமங்கலம் : கண்டமங்கலம் ஒன்றியம் குமளம் கிராமத்தில் இந்திய கம்யூ., சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடந்தது.கிளைச் செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சவுரிராஜன், ஒன்றிய செயலாளர் ஜெயச்சந்திரன், முன்னாள் ஊராட்சி தலைவர் குப்புசாமி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் கண்டன உரையாற்றினர்.போராட்டத்தில், குமளம் கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த சீனிவாசபெருமாள் கோவிலுக்கு சொந்தமான 200 ஏக்கர் நிலங்களை மீட்க வேண்டும். கிராமத்தில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி, தெரு மின்விளக்கு வசதி, கழிவு நீர் கால்வாய் அமைக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி