உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  இந்திய கம்யூ., கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்

 இந்திய கம்யூ., கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்

விழுப்புரம்: விழுப்புரத்தில் இந்திய கம்யூ., கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் சவுரிராஜன் தலைமை தாங்கினார். துணைச் செயலாளர்கள் கலியமூர்த்தி, முருகன், மாவட்ட பொருளாளர் பாலசுப்ரமணியன் முன்னிலை வகித்தனர். மாநில நிர்வாகக்குழு மாசிலாமணி கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில், தலித்துகள், பழங்குடியினர், சிறுபான்மையினர் மற்றும் பெண்கள் மீதான வன்கொடுமைகளை தடுத்து நிறுத்த வலியுறுத்தி பேசினர். நிர்வாகிகள் சரவணன், இன்பஒளி, நாராயணன், சகாபுதீன் உட்பட பலர் பங்கேற்றனர். நகர செயலாளர் அகஸ்டியன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்